அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
சமத்துவ உதயம்

ஆகஸ்ட் 31, 2007

அரசியல் வானில் அன்றைய விடியல்…

ஆச்சரியத்துடன் அனைவரது புருவங்களையும் உயர வைத்தது…!

அதிர்வுகளையும் உற்பத்தி செய்தது…!!

திடீரென சில நட்சத்திரங்கள் விண்ணில் தோன்றி, பூமியில் நிகழப் போகும் அதிசயங்களை பிரகடனம் செய்யுமாம்…!

ஏசுநாதரின் பிறப்பையும் இப்படித்தான் ஒரு நட்சத்திரம் எடுத்துச் சொன்னதாக சத்திய முத்திரை கொண்ட சரித்திரம் உண்டு…!

ஆனால் –

ஒரு ‘நட்சத்திரமே’ மண்ணில் அதிசயம் நடத்திய நாள்தான்

ஆகஸ்ட் 31,2007….!

’மாற்றம் என்பது மானுடத் தத்துவம்’….

அரசியல் உலகும் ஆவலோடு, மாற்றத்தை எதிர்பார்த்து செய்து கொண்டிருந்தது..

கடும் தவம்..

அத்தவத்தின் பலனாய் --

மாற்றத்தின் முன்னுரையாய் --

மலர்ந்தது ஒரு இயக்கம்…

அதுதான் ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ என்னும் இயக்கம்….

இது மற்றுமொரு கட்சி என்று எண்ணிக்கையைக் கூட்ட வந்த இயக்கமல்ல…

மாற்றத்திற்கான துவக்கம் …

சம்பிரதாயமான ‘திராவிடம்’ , ‘கழகம்’ என்ற சொற்கள் இல்லாமல்,

மற்றவற்றிலிருந்து மாறுபட்டது என்ற வகையில் பெயரிலும் கூட மாற்றத்திற்கான வித்து விதைக்கப்பட்டிருப்பது வியத்தகு விந்தை!

“கொள்கை என்னவென்று கூறு” என்றால்… இதோ கட்சிப் பெயரில் இருக்கும் சொல் ஒன்றே ஒரு யுகத்திற்கான உண்மையை உரைத்திடும் என்ற பதில் வருமே….!

அந்த சொல்…

’சமத்துவம்’ என்பது தானே?

சரி….

மாற்றம் என்பதன் மகத்துவத்தை – இந்த மண்ணில் நிலை நாட்ட – வாராது வந்த மாமணியாய் வரலாறு படைத்திட்ட நம்பிக்கை ‘நட்சத்திரம்’ யாரென்று வினா ஒன்று வெகுநேரமாய் வினவப்படுகிறதே..?

இதோ….!

அரசியல் உலகின் ஆறெழுத்து அதிசயம்…

‘சரத்குமார்’

என்பது தான் அதற்கான விடை …!

வெள்ளி : ரூ .36.15 கிராம்     தங்கம் (24K) : ரூ .2524.00 கிராம்      பெட்ரோல் : ரூ . 67.29 லிட்டர்      டீசல் : ரூ . 51.08 லிட்டர்      டாலர் : ரூ . 64.04      யூரோ   : ரூ . 71.94      வெங்காயம் : ரூ . 31.00 கிலோ      தக்காளி : ரூ. 34.00 கிலோ      உருளைக்கிழங்கு : ரூ. 35.00 கிலோ