அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி


தேதி: 12-03-2017

மதுரை மாநகர் மேற்கு மாவட்டம் 56 வட்டம் சார்பில் தண்ணீர் பிரச்சனைக்காக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.தேதி: 05-03-2017

வேலூர் மேற்கு மாவட்டத்திலிருந்து இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஞானதாஸ் தலைமையில் என் முன்னிலையில் இணைந்த மாற்றுக் கட்சியினரை அன்புடன் வரவேற்றோம்தேதி: 05-03-2017

சிறப்பாக நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்திற்கு நன்றி அறிவித்தல் கூட்டம் தற்போது தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.தேதி: 03-03-2017

நேற்று நடைப்பெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்த அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, தொகுதி, பகுதி அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர் வரும் காலம் சிறப்பாக அமைய அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் வெற்றிப்பெறுவோம்.தேதி: 02-03-2017

இன்றைய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சில காட்சிகள்தேதி: 01-03-2017

நாளை நடக்க இருக்கும் பொது குழு கூட்டத்திற்கு வருகை தரும் உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
தேதி: 05-02-2017

சிராவயலில் நானும் ஊர் தலைவரும் திறந்து வைத்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே பதிவிட்டு இருந்தேன். அப்போது சிராவயல் அருகில் உள்ள என் சொந்த ஊரான தளக்காவூர் சென்று வழக்கம் போல ஜல்லிக்கட்டு வீரருமான எனது தந்தை வழி தாத்தா மறைந்த முத்தையா அவர்கள் வளர்த்த காளை பஞ்சகல்யாணியின் சமாதியை வணங்கி, காளையின் ஆபரணங்கள், உபகரணங்கள் பூஜிக்கின்ற இடத்திற்கு சென்று வணங்கி, பிறகு சொந்தங்களுடன் குல தெய்வ கோயிலிலும் பூர்விக இல்லத்திலும் சிலமணி நேரம் சிரித்து மகிழ்ந்தபோது.......
தேதி: 30-1-2017

தமிழனின் பெருமை நிலைநாட்டப்பட்டது. நேற்று சொந்தமண் சிராவயலில் ஊர் தலைவருடன் சேர்ந்து ஜல்லிக்கட்டை திறந்ததில் பெருமை கொள்கிறேன். பங்கு கொண்ட அனைவருக்கும் என் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்தேதி: 29-1-2017

தடைக்குபிறகு தமிழகத்தில் நடந்த முதல் ஜல்லிக்கட்டு. ஊர் தலைவர் அம்பலாருடன் சேர்ந்து சொந்த ஊர் சிராவயலில் திறந்து வைத்தப்பின்னர் குலதெய்வ கோயிலில் நன்றி செலுத்த சமத்துவ சொந்தங்களுடன் சென்றேன்தேதி: 28-1-2017

நேற்று காலை விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகிகள் கூட்டம் விருதுநகரில் மிக சிறப்பாக நடந்தேறியது.தேதி: 28-1-2017

நேற்று மாலை பாலமேடு இந்து நாடார் உறவின் முறை பள்ளியின் 28 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டேன். மாணவர்களும், பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும், தாளாளர்களும் அளித்த உற்சாகமான வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது.
தேதி: 21-12-2016
திருச்சியில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலைமுதல் நடைபெறுகிறது. மாலை படப்படிப்பு முடிந்ததும் நான் கலந்து கொள்ள இருக்கிறேன்.
தேதி: 12-11-2016
அரவக்குறிச்சியில் நேற்றிரவு பரப்புரை செய்தபோது மக்களின் ஆதரவு, மாபெரும் வெற்றியை உறுதி செய்தது.தேதி: 12-11-2016
நேற்று, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் திரு செந்தில் பாலாஜி அவர்களுக்கு பிரச்சாரம் செய்தேன். தமிழக முதலமைச்சரின் சாதனைகளும் நடப்பில் இருக்கும் திட்டங்களும் திரு செந்தில் பாலாஜியின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
தேதி: 30-10-2016
பசும்பொன் தேவர் திருமகனார் ஜெயந்தி
ச.ம.க.நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார்
தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், தேவர் திருமகனாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு, நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருஉருவச்சிலைக்கு நிறுவனத்தலைவர் திரு.ஆர்.சரத்குமார் அவர்கள் மாலை அணிவித்து, அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர், மாநில மகளிரணி துணை செயலாளர் எம்.பாகீரதி, மாநில வர்தகரணி துணை செயலாளர் ஆதித்தன் மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.கிச்சாரமேஷ், டி.நாகப்பன், இ.சி.ஆர்.ராஜ், ஏ.டி.சந்திரபோஸ் எம்.ஏ.ஆண்டனி, எ.பொன்வேல், பி.எஸ்.முருகேசன், எம்.ஜே.மரியமாணிக்கம், எம்.சந்தனகுமார், தையூர் பா.ரமேஷ் உள்ளிட்ட சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். நன்றி, வணக்கம் உழைப்பவரே உயர்ந்தவர், என்றும்அன்புடன், ஆர்.சரத்குமார் B.Sc. நிறுவனத் தலைவர்தேதி: 26-10-2016
தலைவர் புரட்சித்திலகம் அவர்களின் அன்புத் தாயார் தெய்வத்திரு புஷ்பலீலா அம்மையார் அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவுநாள் வட சென்னை மாவட்டம் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தேதி: 26-10-2016
மருதுபாண்டியர்களின் 215வது குருபூஜையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் A. பிரான்சிஸ் அந்தோணி ராஜ் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.தேதி: 02-10-2016
மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து, பெருந்தலைவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தேதி: 17-09-2016
தென் சென்னை கிழக்கு மாவட்டம் 181வது வட்ட துணை செயலாளர் மணிகண்டன்-கீர்த்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தலைவர் புரட்சித்திலகம் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் உடன் சென்னை மண்டல செயலாளர் எம் ஏ சேவியர் கலை இலக்கிய துணை செயலாளர் எம் ராஜேந்திரன் மாவட்ட செயலாளர்கள் இசிஆர் ராஜ்.கிச்சா எம் ஏ.ரமேஷ். தையூர்ர ப. ரமேஷ்.ஏ பொன்வேல் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்தேதி: 05-09-2016
தலைவர் புரட்சித்திலகம் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (5-9-16)விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வட சென்னை மாவட்டம் பெரம்பூர் தெற்கு பகுதி சார்பில் அன்னதானத்தை சென்னை மண்டல செயலாளர் எம் ஏ சேவியர் துவக்கி வைத்தார் உடன் மாவட்ட அவைத்தலைவர் ஆர் முருகேசப்பாண்டியன் பகுதி செயலாளர்கள் ஆர் எட்ராஜா. K H வெங்கடேசன் ஆர் ரஞ்சன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்தேதி: 03-09-2016
தலைவர் புரட்சித்திலகம் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (3-9-16)விநாயகர் சதுர்த்தி விழா வருவதை முன்னிட்டு வட சென்னை மாவட்டம் பெரம்பூர் வடக்கு பகுதி செயலாளர்k H வெங்கடேசன் தலைமையில் சமபந்தி அன்னதானத்தை சென்னை மண்டல செயலாளர் எம் ஏ சேவியர் துவக்கி வைத்தார் உடன் மாவட்ட அவைத்தலைவர் ஆர் முருகேசப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தேதி: 25-08-2016
தலைவர் புரட்சித்திலகம் அவர்களின் ஆணைக்கிணங்க24-08-16 அன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாநில பொருலாளர் திரு ஏ என் சுந்தரேசன் அவர்கள் சென்னை மண்டல செயலாளர் எம் ஏ சேவியர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்தேதி: 15-08-2016
சமத்துவ மக்கள் கட்சியின் சுதந்திரதின விழா கொண்டாட்டம் சமக நிறுவனத் தலைவர் புரட்சி திலகம் அவர்கள் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்தேதி: 09-08-2016
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திலிருந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகி சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆர்.சரத்குமார் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்தேதி: 01-08-2016

தலைவர் புரட்சித்திலகம் அவர்களின் ஆணைக்கிணங்க 31-07-16 அன்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் பம்மல் நகர செயலாளர் ராஜா தலைமையில் மாநில பொருலாளர் அண்ணன் ஏ என் சுந்தரேசன் அவர்கள். சென்னை மண்டல செயலாளர் எம் ஏ சேவியர் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினர் உடன் மாவட்ட செயலாளர் பி எஸ் முருகேசன். மாநில வழ.அணி துணைச் செயலாளர் பூவை செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்தேதி: 01-08-2016

தலைவர் புரட்சித்திலகம் அவர்களின் ஆணைக்கிணங்க வட சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி 45வது வட்ட செயலாளர் கோபி தலைமையில் அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது .இதில் மாநில பொருலாளர் அண்ணன் ஏ என் சுந்தரேசன் அவர்கள். சென்னை மண்டல செயலாளர் எம் ஏ சேவியர் மற்றும் பகுதி செயலாளர் ஆர் எட்ராஜா தொகுதி செயலாளர் ஆர். ரஞ்சன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தேதி: 27-07-2016

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் முதலாமாண்டு நினைவஞ்சலிதேதி: 25-07-2016

தலைவர் புரட்சிதிலகம் பிறந்தநாள் விழா தென்சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி மேட்டுதெருவில் கொண்டாடப்பட்டது இதில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் நலத்திட்டமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர் இ.சி.ஆர்.த.பொன்ராஜ் பகுதி செயலாளர் முருகன் மற்றும் மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தேதி: 17-06-2016

16.06.2016 நடைபெற்ற மாநில நிர்வாகிகள், மாவட்ட, தொகுதிச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
தேதி: 03-05-2016

இன்று திருமதி ராதிகா சரத்குமார் உடன்குடி ஒன்றியத்தில் பரப்புரை செய்கிறார்.
தேதி: 25-4-2016

சிறப்பு திட்டங்களை நிறைவேற்றியவர் ஜெயலலிதாதேதி: 25-4-2016தேதி: 22-4-2016

சரத் குமார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்புதேதி: 21-4-2016

மோட்டார் சைக்கிளில் சென்று சரத் குமார் திவிர் பிரசாரம்தேதி: 16-4-2016

நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் அவர்களை ஆதரித்து கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளர் திருமதி.ராதிகா சரத்குமார் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்ட பிரச்சார பயணத்தில் இரண்டாம் நாளான இன்று (16.04.2016) சனிக்கிழமை, ஆழ்வார்த்திருநகரி ஒன்றியத்திற்குட்பட்ட புன்னக்காயல் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.தேதி: 11-4-2016

தலைவர் புரட்சி திலகம் அவர்களின் ஆணைக்கிணங்க வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி தேர்தல் பொருப்பாளர்கள் நியமன ஆலோசனை கூட்டம் 12-04-16 அன்று மாலை 3மணிக்கு தலைமை (T நகர்) அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச்செயலாளர் மாநில வர்த்தக அணி செயலாளர் சென்னை மண்டல செயலாளர் உள்ளிட்ட மாநில .மாவட்ட .
தொகுதி பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்தேதி: 2-4-2016

மறைந்த படத்தொகுப்பாளர் கிஷோர் குடும்பத்துக்கு சரத்குமார் உதவி
தேதி: 20-3-2016

தலைவர் புரட்சித்திலகம் அவர்களின் ஆணைக்கிணங்க 19-03-16 இன்று மாலை 4 மணிக்கு காஞ்சீபுரம் ( கிழக்கு. மேற்கு. மத்திய ) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பொதுச்செயலாளர்.
பொருலாளர் .துணை பொதுச்செயலாளர் N N சண்முகசுந்தரம்.
சென்னை மண்டல செயலாளர் எம் ஏ சேவியர் மாவட்ட செயலாளர்கள் தையூர் ரமேஷ்.
பூவை செல்வம். காஞ்சி பன்னீர்செல்வம் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்தேதி: 16-3-2016

தலைவர் புரட்சித்திலகம் அவர்களின் பல சாதனைகளில் இதுவும் ஒன்று.தேதி: 16-3-2016

தலைவர் புரட்சித்திலகம் அவர்களின் பல சாதனைகளில் இதுவும் ஒன்று.தேதி: 15-3-2016

தலைவர் புரட்சித்திலகம் அவர்களின் ஆணைக்கிணங்க 15-03-16 தென் சென்னை தெற்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் இ சி ஆர் ராஜ் தலைமையில் நடைபெற்றது இதில் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் ,சென்னை மண்டல செயலாளர் ,மாநில மகளிரணி துணை செயலாளர் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தேதி: 28-2-2016

அகிலஇந்தியசமத்துவமக்கள்கட்சியின்
விருப்பமனுதாக்கல்மற்றும்நேர்காணல்
பத்திரிக்கைச்செய்தி
தேதி: 31-1-2016

தலைவரின் பின் செல்லும் வாகனங்களின் ஒரு பகுதிதேதி: 30-1-2016

பத்திரிக்கைச் செய்தி.
சமத்துவ மக்கள் கட்சியின்தென் சென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பாக நிர்வாகிகள் நியமன நிகழ்ச்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.கிச்சா ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ அவர்கள் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கி வாழ்த்தினார். பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.ஜெயப்ரகாஷ், இளைஞரணி & மாணவரணிச் செயலாளர் சி.வி.சாமுவேல் மேத்யூ, மகளிரணி துணைச் செயலாளர் திருமதி.எம்.பாகீரதி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தென் சென்னை மேற்கு மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன், தி.நகர் தொகுதி செயலாளர் குணசேகரன், சைதை தொகுதிச் செயலாளர் வி.எஸ்.விஜய், மகளிரணிச் செயலாளர் வி.எஸ்.வாணி, இளைஞரணிச் செயலாளர் எம்.குமார் நிர்வாகிகள் சித்ரா பத்மாவதி, கஸ்தூரி, நித்தியா மற்றும் புதிய உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி, வணக்கம்,
உழைப்பவரே உயர்ந்தவர்,
என்றும் அன்புடன்,
ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ,தேதி: 29-1-2016

"சமத்துவ மக்கள் கட்சியின் கடந்த இரண்டு தினங்களின் நிலைப்பாடு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
என்னையோ, அரசியலில் என் வேகத்தையோ, என் இயக்கத்தின் செயல்பாடுகளையோ, என் மேல் உயிரே வைத்திருக்கும் என் சமத்துவ சொந்தங்களையோ சிறிதும் பாதிக்காத இந்த நிகழ்வுகள், இயக்கத்தை பல மடங்கு உத்வேகத்துடன் எந்த வித தடையும் இன்றி அனைவரும் வியக்கும் வகையில் வேறு ஒரு உயரத்திற்கு எடுத்து செல்லும் என்பது உறுதி.

நேற்று கட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் இரவு 10.30 வரை நடந்த ஆலோசனை கூட்டத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு, தங்களின் அன்பையும் என் முடிவிற்கு தடையற்ற ஆதரவையும் வழங்கிய மாநில மாவட்ட நிர்வாகிகளின் உறுதியான வார்த்தைகளே என்னை பல்வேறு நிலைகளில் தெளிவான தீர்க்கமான நிலைக்கு உதவி செய்கின்றன. 80 மேற்பட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பேசும்போது வெளியிட்ட அன்பான உறுதியான உணர்வு மிக்க வார்த்தைகள் எனக்கு நெகிழ்ச்சியை அளித்து மேலும் ஊக்கம் ஊட்டுவதாக இருந்தது.

பல்வேறு பணிகளுக்கும் குடும்ப நிகழ்வுகளுக்கும் மத்தியில் தலைவர் அழைக்கிறார் என்றவுடன் 12 மணி நேர அவகாசம் கூட இல்லாத நிலையில் ஓடோடி வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்து அனைவரும் நலமுடன் இல்லம் திரும்பியது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்"

-ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ,இடம்: மகாகவி பாரதியார் அரங்கம், சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம்

தேதி: 2-1-2016

சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிரணி பொறுப்பில் உள்ளவர்கள் மேலும் பொறுப்பை ஏற்க இருப்பவர்கள் கலந்து கொண்ட கூட்டம். தீவிர உறுப்பினர் சேர்க்கை, கட்சியையும் அணியையும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொது செயலாளர் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மாநில மகளிரணி துணை செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறித்து விளக்கினார்கள். பல படித்த இளம் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொறுப்புகளை ஏற்க முன் வந்தது, இந்த தலைமுறை பெண்களுக்கு பொது சேவையில் இருக்கும் ஆர்வத்தையும், அவர்களின் தன்னம்பிக்கையையும் தெரிய படுத்தியது. அடுத்த மண்டல மகளிரணி கூட்டம் வரும் 13 ஆம் தேதி என்று தீர்மானிக்கப் பட்டது. மேலும் வரும் பிப்ரவரி மாதம் மாநில அளவில் மகளிரணி மாநாடு நடத்த பொது செயலாளரால் கருத்து தெரிவிக்கப் பட்டு அது அனைவராலும் வரவேற்கப் பட்டது. தேசிய கீதத்துடன் கூட்டம் இனிதே முடிவுற்றது
தேதி - 29/12/2015
அகிலஇந்தியசமத்துவமக்கள்கட்சியின்
சேலம்மேற்குமாவட்டசெயல்வீரர்கள்கூட்டம்
ச.ம.க. தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ தலைமையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தேதி - 25/12/2015
பத்திரிக்கைச் செய்தி
” நமது இலக்கு மதுவிலக்கு” என்ற கோஷத்தோடு தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி காந்தி பேரவைத் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 50 நாட்கள் தொடர் பாதயாத்திரையை இன்று காலை 10 மணியளவில் சென்னை ஐகோர்ட் அருகே உள்ள ராஜாஜி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தொடங்கினார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ அவர்களும் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ,பொதுசெயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.ஜெயப்ரகாஷ்,சென்னை மண்டலச் செயலாளர் எம்.ஏ.சேவியர் மகளிரணி துணைச் செயலாளர் எம்.பாகீரதி மாவட்டச் செயலாளர்கள் சி.ராஜா, எஸ்.பிரசாத் மற்றும் நிர்வாகிகள் கிச்சா ரமேஷ், என்,.ஆர்,பி,.ஆதித்தன், ரஞ்சன் மதன்,எட்ராஜ், முருகேசபாண்டியன், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.தேதி - 24/12/2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.தேதி - 21/12/2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.தேதி - 18/12/2015
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
கோயம்பேடு பகுதி மக்களுக்கு
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டதுதேதி - 17/12/2015
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
எம்.ஜி.ஆர்.நகர் பகுதி மக்களுக்கு
ச.ம.க.நிறுவனர் – தலைவர் ஆர்.சரத்கு மார் எம்.எல்.ஏ
நிவாரண உதவி வழங்கினார்தேதி: 16-12-2015
சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிரணி பொறுப்பில் உள்ளவர்கள் மேலும் பொறுப்பை ஏற்க இருப்பவர்கள் கலந்து கொண்ட கூட்டம். தீவிர உறுப்பினர் சேர்க்கை, கட்சியையும் அணியையும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொது செயலாளர் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மாநில மகளிரணி துணை செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறித்து விளக்கினார்கள்.
பல படித்த இளம் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொறுப்புகளை ஏற்க முன் வந்தது, இந்த தலைமுறை பெண்களுக்கு பொது சேவையில் இருக்கும் ஆர்வத்தையும், அவர்களின் தன்னம்பிக்கையையும் தெரிய படுத்தியது. அடுத்த மண்டல மகளிரணி கூட்டம் வரும் 13 ஆம் தேதி என்று தீர்மானிக்கப் பட்டது. மேலும் வரும் பிப்ரவரி மாதம் மாநில அளவில் மகளிரணி மாநாடு நடத்த பொது செயலாளரால் கருத்து தெரிவிக்கப் பட்டு அது அனைவராலும் வரவேற்கப் பட்டது. தேசிய கீதத்துடன் கூட்டம் இனிதே முடிவுற்றதுதேதி: 15-12-2015
அகிலஇந்தியசமத்துவமக்கள்கட்சியின்நிறுவனர்தலைவர்ஆர்.சரத்குமார்எம்.எல்.ஏஅவர்களை
இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன்அவர்கள்
இன்றுகாலைஅவரதுஇல்லத்தில்சந்தித்தார்
‘நமது இலக்கு மதுவிலக்கு’ என்ற முழக்கத்தோடு இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைப் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 25 அன்று சென்னையில் நடைபெறும் தொடக்கவிழா நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அருகில் தக்கர் பாபா வித்யாலயா தலைவர் திரு.பாண்டியன், அகில இந்திய மதுவிலக்கு பேரவை செயற்குழு உறுப்பினர் திரு.மாருதி மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.ஜெயப்ரகாஷ் உடன் இருந்தனர்.தேதி: 11-12-2015
மத்திய சென்னை மாவட்டத்தில்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில்
நிவாரண உதவிகள். ச.ம.க.நிறுவனர் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.வழங்கினார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம் சரவண பாலாஜி தியேட்டர் அருகில் உள்ள குடிசை வாழ் மக்களுக்கு பிளாஸ்டிக் பக்கெட், பாத்திரங்கள், உணவுப்பொருட்கள் போன்ற நிவாரண உதவிகளை கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ அவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் சி.ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், நிதி ஆலோசகர் ராஜசேகர், மாநில மகளிரணி துணைச் செயலாளர் டாக்டர் ஜெமிலா, மத்திய சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பிரசாத், மாவட்ட அவைத் தலைவர் பாரதி, வெங்கடேசன், மாணிக்கம், ஏழுமலை, லோகா, பெருமாள், ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
நன்றி,வணக்கம்
என்றும்அன்புடன்
உழைப்பவரேஉயர்ந்தவர்தேதி: 11-12-2015
வடசென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி வியாசர்பாடி முல்லைநகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.இ.ச.ம.க.சார்பில் வடசென்னை மாவட்ட செயலாளர் எம்.ஏ.சேவியர் தலைமையில் தலைவர் புரட்சித்திலகம் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுசெயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.ஜெயப்பிரகாஷ்,மாநில இளைஞர் அணி செயலாளர் ஷாம்மேத்தியூ, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் டி.மகாலிங்கம், மாநில மகளிர் அணி துணை செயலாளர்கள் எம்.பாகீரதி, மா.ரா.ஜெமிலா, மாவட்ட பொருளாளர் ஜி.கணேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் ஏ.வி.இ.நந்தகோபால். ஓஸ்வால் பி.ராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் எஸ்.புவனேஸ்வரி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பூபால்ராஷ், தொழில் சங்க து.செயலாளர் எம்.சேகர், தென்சென்னை மாவட்ட (கி) செயலாளர் உதயகுமார், தென்சென்னை (மே) மாவட்ட துணை செயலாளர் கிச்சா ரமேஷ், பகுதி செயலாளர்கள் பெரம்பூர் ஆர்.முருகேசபாண்டியன், கொளத்தூர் ஆர்.ரஞ்சன், ஆர்.கே.நகர் வி.ராஜசேகரன், இராயபுரம் கே.விஜயன், துறைமுகம் ஸ்டான்லி ஆர்.மணி, வேளச்சேரி பகுதி செயலாளர் எம்.எம்.ஆர்.மதன், பெரம்பூர் பகுதி து.செயலாளர் மாரிமுத்து, வட்ட செயலாளர்கள் பி.கோபி. கே.எச்.வெங்கடேசன், அமின்வாஜித், கணேசன். ரவி, பஞ்சாட்சரம், ராமச்சந்திரன், கொளத்தூர் பகுதி இளைஞர் அணி செயலாளர் எஸ்.செல்வகுமார், மாணவர் அணி செயலாளர் எஸ்.செல்வம், மற்றும் நிர்வாகிகள் மகாராஜன், அபு, செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தேதி: 09-12-2015
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
மருத்துவ உதவி முகாம் நடைபெற்றது
ச.ம.க.தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ பங்கேற்றார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், நடமாடும் மருத்துவ உதவி முகாம் கடந்த10 தினங்களாக தொடர்ந்து இயங்கி வருகிறது. இன்று முழு அளவிலான முகாம் நடத்தப்பட்டது. சைதாப்பேட்டை ஜாபர்கான் பேட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக. கட்சியின் நிதி ஆலோசகர் டாக்டர் ராஜசேகர் தலைமையில் 10 டாக்டர்கள் கொண்ட குழு அப்பகுதி மக்களைப் பரிசோதித்து தேவையான மருந்துகளை இலவசமாக வழங்கினார்கள். பலருக்கு நோய்தடுப்பு ஊசி போடப்பட்டது.சத்து மாத்திரைகள்,, தொற்றுநோய் தடுப்பு மருந்துகள், இருமல், காய்ச்சல், சேற்றுப்புண், மருந்துகள் வழங்கப்பட்டன. மிகவும் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ சுமார் 2 மணி நேரம் அந்த முகாமிற்கு வந்திருந்து மருத்துவப் பரிசோதனைகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இம்மருத்துவ முகாம் தொடர்பான பணிகளுக்கு ஏற்பாடுகளை மேற்கொண்டார். கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயப்ரகாஷ், மாநில மகளிரணி துணைச் செயலாளர் டாக்டர்.ஜெமிலா, சென்னை மண்டல செயலாளர் சேவியர், விருகை தொகுதிச்செயலாளர் என்.ஆர்.பி.ஆதித்தன், , தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.சி.உதயகுமார் மாவட்ட துணைச் செயலாளர்கள் கிச்சாரமேஷ், துரைமாணிக்கம், செந்தில், ,நிர்வாகிகள், அருள், ராஜா, சிவா, உள்ளிட்ட நிர்வாகிகள் உறுதுணையாக இருந்தனர். 700க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் இம்மருத்துவ முகாமில் இலவசமாக வழங்கப்பட்டது.
நன்றி, வணக்கம்,
உழைப்பவரே உயர்ந்தவர்,
என்றும் அன்புடன்,தேதி: 07-12-2015
வெள்ளத்தால் உருவான குப்பை மேடுகளை அகற்றும் பணி
ச.ம.க. நிறுவனர் – தலைவர் ஆர்.சரத்குமார் MLA தொடங்கி வைத்தார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள், அந்தந்த பகுதிகளில் மழை வெள்ள நிவாரண உதவிப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று காலை சைதாப்பேட்டை மேற்கு, 5 விளக்கு பகுதிகளிலும், ஜாபர்கான்பேட்டை பகுதிகளிலும், தொடர்ந்து 139, 140 வது வார்டு பகுதிகள் முழுவதும் குவிந்து கிடக்கும் குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகளின் ஆலோசனைப்படி, சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், பொக்லைன்கள், லாரிகள் மூலம் அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடக்கவுள்ள இந்த துப்புரவு பணிகளை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் – தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ அவர்கள் தொடங்கி வைத்தார். நடமாடும் மருத்துவ முகாம் அதே பகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நடமாடும் மருத்துவ உதவி முகாம் செயல்பட்டு வருகிறது. மருத்துவ உதவி முகாம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.சிகிச்சையளித்து தேவையான மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. நிவாரண உதவிகள் அதேபோன்று குழந்தைகளுக்கு பிஸ்கட், பால்பவுடர், பெண்களுக்கு நாப்கின், தண்ணீர்பாட்டில் மற்றும் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

துணைத் தலைவர் ஏ.நாராயணன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆர்.ஜெயப்ரகாஷ், நிதி ஆலோசகர் டாக்டர்.ராஜசேகர், மகளிரணி துணைச் செயலாளர்கள் மா.ரா.ஜெமிலா, எம்.பாகீரதி, சென்னை மண்டல செயலாளர் .எம்.ஏ.சேவியர், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ராஜா, தென் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆதித்தன், கிச்சா ரமேஷ், ஜாபர்கான்பேட்டை பகுதி நிர்வாகிகள் அருள், ராஜா, கைலாஷ் ஆகியோர் என்னுடன் மேற்படி பணிகளில் ஈடுபட்டனர்.
தேதி: 30/11/2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மராட்டிய மாநில தலைவர் சாலமன் ராஜகுமார், செயலாளர் ராஜ்குமார். ஆலோசகர் ராஜா இளங்கோ ஆகியோருக்கு புரட்சித் திலகம் அவர்கள் மும்பை சமத்துவ மக்கள் கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து நியமன கடிதங்களை வழங்கினார். பொதுச்செயலாளர் கரு.நாகராஜனும் கலந்து கொண்டார். வருகைதந்த தலைவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளங்கள் முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.தேதி: 27-12-2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென் மண்டல அலுவலகம் 22.11.2015 அன்று திருநெல்வேலி, சேவியர் காலனியில் கட்சியின் நிறுவனர் – தலைவர் புரட்சித்திலகம் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ அவர்களின் திருக்கரத்தால் திறந்து வைக்கப்பட்டது. மகளிரணிச் செயலாளர் திருமதி.ராதிகா சரத்குமார் அவர்கள் குத்து விளக்கேற்றினார்கள். தென்மண்டலச் செயலாளர் என்.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.ஜெயப்ரகாஷ், கலை இலக்கிய அணிச் செயலாளர் NMS.விவேகானந்தன், அமைப்புச் செயலாளர் ஆர்.கே.காளிதாஸ், இளைஞரணிச் செயலாளர் சாம் மேத்யூ, மகளிரணி துணைச் செயலாளர்கள் திருமதி.ஜே.ஜே.ஷீபா, எம்.பாகீரதி, மா.ரா.ஜெமிலா இளைஞரணி துணைச் செயலாளர் பி.ஆர்.ஆர்.சுந்தர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் டிடிஎன்.லாரன்ஸ், அரசன் எஸ் பொன்ராஜ், என்.சுரேஷ்பிரகாஷ், SKTB.அதியமான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்தேதி: 19-11-2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் எழும்பூர் தொகுதி தாசபிரகாஷ் என்ற இடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 17.11.2015(செவ்வாய்க்கிழமை) அன்று நிவாரண உதவி வழங்கப்பட்டது. உடன் மாநில நிதி ஆலோசகர் திரு.டாக்டர் ராஜசேகர், மத்திய சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பிரசாத், வட்டச் செயலாளர் வெங்கடேஷ் கலந்து கொண்டனரதேதி: 19-11-2015
வட சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி முத்தமிழ் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவுகளை வட்ட செயலாளர் h m வெங்கடேசன் ஏற்பாட்டில் மாவட்டசெயலாளர் எம் ஏ சேவியர் வழங்கினார் உடன் நிர்வாகிகளும் ஆர்முருகேசபாண்டியன் . ஆர் எட்ராஐ ஆர் ரஞ்சன் மாரிமுத்து கணேசன் அமின் வாஜி செந்தில் அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்தேதி: 19-11-2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புரட்சித்திலகத்தின் ஆணைப்படி மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஏ.கிச்சா ரமேஷ் அவர்களின் தலைமையில் 16,17,18 ஆகிய மூன்று தினங்களாக எம்.ஜி.ஆர் நகர், சூலப்பள்ளம், விருகம்பாக்கம், ஜாபர்கான் பேட்டை மற்றும் ஆற்றோர குடியிருப்பு பகுதிவாழ் மக்களுக்கு காலை உணவும், மதிய உணவும் குழந்தைகளுக்கு பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. 18.11.2015 அன்று கட்சியின் மாநில நிதி ஆலோசகர் டாக்டர்.ராஜசேகர் அவர்கள் தலைமை ஏற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார். கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.தேதி: 19-11-2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ அவர்களை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ அவர்களை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொட்டிவாக்கம் அவரது இல்லத்தில் சந்தித்து தனது அண்ணன் மறைந்த பி.ராமகிருஷ்ணன் அவர்களுடைய மகன்-செல்வன் ஆர்.பொன்னையா நாகராஜ் செல்வி. கே.எஸ்.தர்ஷணா ஆகியோரது திருமண அழைப்பிதழை நேரில் கொடுத்து திருமணத்திற்கு அழைத்தார்.தேதி: 13-11-2015
தீபாவளி அன்று விருதுநகர் ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இணைந்து பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதுதேதி: 09-11-2015
நேற்று மாலை 4 மணியளவில் பாவூர்சத்திரத்தில் வைத்து நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் திரு. S.K.T.B.அதியமான் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தேதி: 31-10-2015
ச.ம.க.வின் உயர்மட்டக்குழு கூட்டம்

சென்னையில் நிறுவனர் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர் மட்டக்குழு கூட்டம் இன்று 31.10.2015 காலை 10. மணிக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனர் - தலைவர் ஆர்.சரத்குமார் எம் .எல் .ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ பேசிய போது எடுத்த படம் .அருகில் அவைத் தலைவர் வி.செல்வராஜ் ஐ ஏ எஸ், துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.ஜெயப்ரகாஷ் மற்றும் உயர்மட்டக் குழு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் 2016 தேர்தல் பணிகள், பொதுக்குழு நடத்துவது. சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்துவது உள்பட பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.தேதி: 12-10-2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பரமு என்கிற பரமசிவம் அவர்களை மர்மக் கும்பல் வெட்டி படுகொலை செய்தது. தகவலறிந்த கட்சியின் நிறுவனர் – தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.,எல்.ஏ, பொதுச்செயலாளர் கரு.நாகரஜன் அகியோர் உடன் இருந்தனர். தன்னுடன் 25 ஆண்டுகாலமாக பயணித்த அன்புச்சகோதரரின் 4 குழந்தைகளின் பெயரில் ரூ 5 லட்சம் வைப்பு நிதி அளித்து அதன் மூலம் படிப்பு சம்பந்தமான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டார்.தேதி: 09-10-2015
நடிகர் சங்கத் தேர்தலில்
ஆர்.சரத்குமார் அணிக்கு
தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு 18.10.2015 அன்று நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், ஆர்.சரத்குமார் அவர்கள் தலைமையில் போட்டியிடும் அணிக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க அவரசரக் கூட்டத்தின் முடிவில், சங்கத் தலைவர் எஸ்.தானு அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஆர்.சரத்குமார் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த போது எடுத்த படம். சங்கச் செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், டி.சிவா, பொருளாளர் சத்யஜோதி தியாகராஜன்தேதி: 06-10-2015
மத்திய சென்னை மேற்கு மாவட்டம் வில்லிவாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் உரையாற்றுகிறார். தலைமை நிலையச் செயலாளர் ஐஸ் அவுஸ் தியாகு, மாநில மகளிரணி துணைச் செயலாளர் திருமதி.மா.ரா.ஜெமிலா, மாவட்டச் செயலாளர்கள் திரு. பிரசாத் மற்றும் ராஜா உடன் இருந்தனர்.தேதி: 06-10-2015
சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் மைக்கேல் தங்கராஜ் தலைமையில் ஓமலூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம், குன்னம்பட்டி நகர அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. பூம்பட்டி தாரமங்கலம் ஐந்து மைல் உள்பட 7 இடங்களில் கொடி ஏற்று விழாவும் இரவு 7 மணிக்கு அரசிராமணி பேரூராட்சி குன்னம்பட்டியில் பொதுக்கூட்டமும் கொடியேற்று விழாவும் நடைபெற்றது.தேதி: 02-10-2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. கன்னியாகுமரி (கி) மாவட்டம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா - பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள நினைவு மண்டபங்களில் உள்ள சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் புளியடி பால்ராஜ். மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜெபசிங், இரா.முத்துகுமார், மாநில பேச்சாளர் அமலன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஜெயசீலன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சூர்யா, மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.தர்மராஜன், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் செண்பகவல்லி, மாவட்ட மகளிரணி செயலாளர் பார்வதி மற்றும் ராஜபிரகாஷ், அப்டாகணேசன், மைக்கேல்ராஜ், வில்லுகுறி ராஜேஷ், நகர அவைத்தலைவர் கால்டுவின், ஜோனியா, ஜுனைதா, ஆன்றொ மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தேதி: 30-09-2015
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என மத்திய அரசை வலியுறுத்தி சமக தலைவர் புரட்சித்திலகம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே 29.09.2015 அன்று மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நேற்று (29.09.2015 செவ்வாய்க்கிழமை) சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ, இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயப்ரகாஷ், சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர், மாநில இளைஞரணிச் செயலாளர் சி.வி.சாமுவேல் மேத்யூ, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் டி.மகாலிங்கம், பி.ஆர்.ஆர்.சுந்தர், தலைமை நிலையச் செயலாளர் ஐஸ் அவுஸ் தியாகு, மாநில மகளிரணி துணைச் செயலாளர்கள் பாகீரதி, ஜெமிலா, சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ராஜா, பிரசாத், பொன்னரசன், பூவை செல்வம், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து தலைவர் திரு.ஆர்.சரத்குமார் கூறியதாவது:
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்று கூறிய அமெரிக்கா, தற்போது தன்னுடைய நிலைபாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.சர்வதேச விசாரணை வேண்டாம், உள்ளூர் நீதிமன்றத்திலே விசாரித்து கொல்ளலாம் என்று கூறீருக்கிறது.இது மிகவும் வேதனையான விஷயம்.
இதுகுறித்து கடந்த வாரத்தில் தமிழக முதல் – அமைச்சர் சட்டமன்றத்திலே அமெரிக்க அரசு தன்னுடைய நிலபாட்டை மாற்றி இருப்பதால், விவாதத்தில் கலந்து கொள்ளாமல், அதற்கு எதிர்மாறாக சர்வதேச விசாரணை தேவை என்ரு மத்திய அரசு கேட்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்படியே உள்ளூரில் விசாரணை நடத்தலாம் என்றாலும் கூட, அங்கு கட்டுமானங்கள் சரியில்லை என்று மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது.
மத்திய மந்திரிகள் எல்லாம் அண்டை நாடுகளுடன் சிறந்த உறவு இருக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் நம்முடைய இனம் இலங்கையிலே அழிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை இருக்கும் போது, அதை மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்து, அந்த குற்றங்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும் என்ர நிலையிலே, சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.தேதி: 30-09-2015
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச விசாரணை அமைப்பின் மூலம் விசாரிக்க, மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 29.09.2015 செவ்வாய்க்கிழமை அன்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தேதி: 27-09-2015
இன்று 27.9.2015 தர்மபுரியில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் +2, 10 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு புரட்சித் திலகம் அவர்கள் பதக்கம் சான்றிதழ் மற்றும் பரிசு வழஙகி சிறப்பான உரை நிகழ்த்தினார்.
விழாவை அன்னை கஸ்தூரிப சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பொதுச்செயலாளர் கரு.நாகராஐன். நிதி ஆலோசகர் டாக்டர் ராஜசேகர், கட்சி நிர்வாகிகள் கோபால் மாவட்ட செயலாளர்கள் தர்மபுரி முருகன், கிருஷ்ணகிரி அருண், சேலம் மைக்கேல் முருகேசன் ஜவஹர், நாமக்கல் சுரேஷ் காந்தி மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.தேதி: 25-09-2015
புரட்சித்திலகம் அவர்களின் ஆணைப்படி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் திருவான்மியூர் தியாகராஜ தியேட்டர் அருகில் நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய இடத்தில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் உதயகுமார், பகுதிச் செயலாளர் மதன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் ஏ.நாராயணன், பொதுச் செயலாலர் கரு.நாகராஜன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் டாக்டர் ஜெமிலா, வர்த்தகரணிச் செயலாளர் கே.ஜே.நாதன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் P.R.R.சுந்தர், வேளச்சேரி தொகுதிச் செயலாளர் ஐவென்ஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மகளிர்க்கு இலவச தையல் எந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டனதேதி: 25-09-2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனர் அவர்களின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனர் அவர்களின் வீட்டில் உள்ள நினைவு மண்டபத்தில் அவரது திரு உருவப்படத்திற்கு தலைவர் ஆர்.சரத்குமார் MLA அவர்களால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணைத்தலைவர் A. நாராயணன் MLA, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், நிதி ஆலோசகர் Dr.ராஜசேகர், இளைஞரணிச் செயலாளர் சி.வி சாம்மேத்யூ, சென்னை மண்டலச் செயலாளர் MA.சேவியர், மகளிரணி துணைச் செயலாளர், Dr. மா.ரா.ஜெமிலா, எம்.பாகீரதி, இளைஞரணி துணைச் செயலாளர் P.R.R சுந்தர், மாவட்டச் செயலாளர்கள் சி.ராஜா, டி.சி.உதயகுமார், எஸ்.பிரசாத், ஏபிஎஸ்.பொன்னரசன், தொகுதிச் செயலாளர்கள் டி.வினாயகமூர்த்தி, டி.நாகப்பன், என்.ஆர்.பி ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.இடம்: ஜேப்பியார் கல்லூரி, சென்னை
தேதி: 24-9-2015
பங்குபெற்றோர்: மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள்
சுமார் 5 நிமிடங்களுக்கு இடைவிடாத கரவொலியும் ஆரவாரமும், அதன் பின்னர், புரட்சி திலகம் அவர்களின் எழுச்சி உரையும், மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த ஊக்கமூட்டும் பதில்களும் அந்த அரங்கத்தை அதிர செய்தன.
அந்த 90 நிமிடங்களும் மாணவர்களின் கேள்விகள் பொறியியல் கல்வி, அதன் தகுதி, முன்னேறுவதற்கான வழிகள், சமுதாயத்தின் மேல் அவர்களின் பார்வை, வேலை வாய்ப்பு இவற்றை சுற்றி இருந்தன. புரட்சி திலகம் தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் தான் கற்றவைகளில் இருந்தும் பகிர்ந்து கொண்ட விதம் மிகவும் கருத்தாழம் மிக்கதாகவும் அறிவை தூண்டுவதாகவும் இருந்தது.தேதி: 19-09-2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் புரட்சி திலகம் அவர்கள், கடையநல்லூரில் இன்று, நெல்லை மேற்கு மாவட்டம் துணைசெயலாளர் திரு திருமலைசாமி அவர்களின் புதல்வன் திரு அருண்குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.தேதி: 19-09-2015
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் புரட்சி திலகம்
அவர்கள் இன்று கடையநல்லூரில் ஒன்றியத்து கள்ளம்புலி கிராமத்தை சேர்ந்த திரு சிர்மான் (அ) சாமி என்ற தொண்டர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சாமி அவரது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்.
ஒன்றிய செயலாளர் ரூபாய் முப்பதாயிரத்திற்கான காசோலையை காமராஜர் மணிமண்டபத்திற்காக வழங்கினார்தேதி: 18-09-2015
இன்று காலை குமரி கிழக்கு மாவட்டம் மயிலாடி, லட்சுமிபுரம், அழகப்பபுரம் உள்பட 7 இடங்களில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்றப்பட்டது. அஞ்சுகிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
பொது செயலாளர் திரு.கரு. நாகராஜன், கொள்கைபரப்பு செயலாளர் திரு. ஜெயபிரகாஷ் மாவட்ட செயலாளர் பொன்ராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தேதி: 15-09-2015
கடந்த 11 ஆம் தேதி புரட்சி திலகம் தலைமை தாங்கி நடத்திய சவீதா மருத்துவ கல்லூரியின் கலை நிகழ்ச்சி விழாவின் புகைப்படங்களும் நிகழ்ச்சி பற்றிய செய்தியும் :
சுமார் 1000 பேர் கொண்ட அரங்கில், மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மத்தியில், புரட்சி திலகம் உரை நிகழ்த்தினார். தன்னுடைய மாணவ வயது முதல் தற்போதய அரசியல் வாழ்க்கை வரையிலான பயணத்தை மிக அழகாக மாணவர்கள் கரகோஷங்களிடையே எடுத்துரைத்தார்.
அவர்களின் கேள்விகளுக்கு நகைச்சுவை கலந்தும் இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் வகையிலும் பதிலளித்தார்.
போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கி நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்.தேதி: 13-09-2015
மஞ்சம்மாள் உயர்நிலை பள்ளி - தென்காசி
நாளைய தலைவர்களுடன் இன்றைய இணையில்லா தலைவர் அன்பு பரிமாற்றம்
தலைவருக்கும் பிடித்தது
மாணவருக்கும் பிடித்தது
காவலருக்கும் பிடித்தது
இந்த 'கைகுலுக்கலில்' ஆரம்பிக்கும் இந்த பந்தம், இம்மாணவர்களின் எதிர்காலத்தை கைதூக்கி விடும் நாளில் தொடரும் .... மிக விரைவில்..தேதி: 10-09-2015
ஆலங்குளம் அருகே உள்ள அத்தீயூத்தில் உள்ள டீக்கடையில் எம்எல்ஏ சரத்குமார் மற்றும் எம்எல்ஏ பிஜி ராஜேந்திரன்தேதி: 09-09-2015
முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்கும் விழா தென்காசி தொகுதியில், கீழப்பாவூர் ஒன்றியம் டி பி சொக்கலால் பள்ளியில் நேற்று நடைபெற்றது. புரட்சி திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்தேதி: 08-09-2015
கலாம் மறைந்தாலும், அவரது சிந்தனைகள், எண்ணங்கள், லட்சியங்கள் மறையாது - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில், இன்று காலை சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் வீட்டிற்கு சென்றார். அங்கு கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயர் மற்றும் பேரன் சலீம் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
கலாம் இல்லத்தில் உள்ள கலாம் கேலரியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார்
‘‘2003ஆம் ஆண்டு ராமேஸ்வரம் வந்த போது டாக்டர் கலாமின் சகோதரரை சந்தித்து சென்றேன். கலாம் மறைவின்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இப்போது வாய்ப்பு கிடைத்தது. கலாம் மறைந்தாலும் அவரது சிந்தனைகள், எண்ணங்கள், லட்சியங்கள் மறையாது. இளைஞர்கள், மாணவர்கள் அவரது லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு முன்வருவதன் மூலம் கலாம் என்றும் நம்முடன் வாழ்வார்’’ என்றார்.
இந்நிகழ்வில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் ராமேஸ்வரம் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.தேதி: 07-09-2015
புரட்சி திலகம் நேற்று தென்காசி தொகுதியில் உள்ள சுரண்டையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.தேதி: 07-09-2015
புரட்சி திலகம், கடந்த வாரம் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளிடையே உரையாற்றினார். தனது கடந்த கால வாழ்க்கை, அதன் மூலம் இளைய சமுதாயம் கற்றுக்கொள்ள கொள்ள வேண்டிய பாடங்கள் பற்றியும் மிக அருமையாக எடுத்து கூறினார். இறுதியில் மாணவர்களின் கேள்விகளுக்கு மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் பதிலளித்தார்.தேதி: 06-09-2015
புரட்சி திலகம், திரு. ஆர். சரத்குமார் தென்காசி தொகுதிக்கு உட்பட்ட குற்றாலம், இலஞ்சி, மேலகரம் மற்றும் ஆவடையனூர் கிராம பஞ்சாயத்துகளில், தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவைகளை வழங்கி, விழாவில் கலந்து கொண்டும் சிறப்பித்தார்.தேதி: 01-09-2015
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் , 9ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னையில் கட்சி அலுவலகத்தில் நேற்று காலை அதன் தலைவர், புரட்சி திலகம் அவர்களால், கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது. . அதன் பிறகு, புரட்சி திலகம் அவர்கள், கட்சி அலுவலகத்தில் உள்ள மகாகவி பாரதியார் அரங்கத்தில், தொண்டர்களுடனும், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடனும் , கூட்டத்தில் கலந்துகொண்டு எழுச்சி உரை ஆற்றினார்.