அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
இயக்கத்தை பற்றி

இந்திய துணைக்கண்டத்தில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சமத்துவத்துடன் வாழ்வதை உறுதிபடுத்த ஒரு இயக்கம் உருவாகி இருக்கிறது என்று சொன்னால் அது சமத்துவ மக்கள் கட்சியாகத்தான் இருக்க முடியும்.

அனைவரும் வியக்கதத்தக்க வகையில், ஒரு கட்டுபாடுடன் உறுதியுடன் செயல்படும் கட்சியாக 2007 ஆகஸ்ட் 31 அன்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இதன் தலைவர் திரு.ஆர்.சரத்குமார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது

நாட்டில் அனைவரும் உயர்வதற்கு உறுதியான, நேர்மையான உழைப்பு என்பது அவசியம். அந்த உழைப்புதான் ஜாதி மத மொழி இன பொருளாதார வேறுபாடுகளை கடந்து சமத்துவத்துடன் மக்களை உயர்த்த முடியும்.

அந்த உயர்வை தலைவன் ஒருவன் எட்டும்போது, தான் மட்டும் அல்லாமல் மற்றவர்களையும் அரவணைத்து அவர்களை தன்னுடைய அன்பாலும் பாசத்தாலும் இணைத்து, தான் பெற்ற வெற்றியை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் - "உழைப்பவரே உயர்ந்தவர்" என்ற மந்திரத்தை முதன்மை கொள்கையாய் கொண்டு தோற்றுவிக்கப்பட்டதுதான் சமத்துவ மக்கள் கட்சி.

இந்த இயக்கத்தில் தன்னை இணைத்து கொள்வதில் ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட வேண்டும் - பெருமை பட முடியும்.

கொள்கைகள் :

உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தி மக்கள் நேசிக்கும் அரசை வழிநடத்தி ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் அகத்திலும் மகிழ்ச்சியுற செய்தல்.

இளைஞர்களை ஏற்றம் பெற வைத்தல்.

தனிமனித ஒழுக்கத்துடன் பொறுப்புள்ள குடிமகன்களை உருவாக்குதல்

சமநிலைச் சமுதாயம் அமைத்தல்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என வலியுறுத்தல்.

எளியோரைப் பாதுகாத்தல்.

பெண் உரிமை பேணுதல்.

விவசாயம் மற்றும்தொழில்நுட்பம் வளர்த்தல்.

கல்வி, சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடுதல்.

மக்கள் நேசிக்கும் ஒளிவு மறைவு இல்லாத ஆட்சிமுறை.

img

நோக்கம்:

ஜாதிமத மொழி இன பொருளாதார வேறுபாடற்ற சமூகத்தை உருவாக்கி மக்களை நேசிக்கும் அரசை நடத்துவது.

வெள்ளி : ரூ .36.15 கிராம்     தங்கம் (24K) : ரூ .2524.00 கிராம்      பெட்ரோல் : ரூ . 67.29 லிட்டர்      டீசல் : ரூ . 51.08 லிட்டர்      டாலர் : ரூ . 64.04      யூரோ   : ரூ . 71.94      வெங்காயம் : ரூ . 31.00 கிலோ      தக்காளி : ரூ. 34.00 கிலோ      உருளைக்கிழங்கு : ரூ. 35.00 கிலோ