அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிசமீபத்திய செய்தி


பசும்பொன் தேவர் திருமகனார் ஜெயந்தி
ச.ம.க.நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார்
தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், தேவர் திருமகனாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு, நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருஉருவச்சிலைக்கு நிறுவனத்தலைவர் திரு.ஆர்.சரத்குமார் அவர்கள் மாலை அணிவித்து, அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர், மாநில மகளிரணி துணை செயலாளர் எம்.பாகீரதி, மாநில வர்தகரணி துணை செயலாளர் ஆதித்தன் மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.கிச்சாரமேஷ், டி.நாகப்பன், இ.சி.ஆர்.ராஜ், ஏ.டி.சந்திரபோஸ் எம்.ஏ.ஆண்டனி, எ.பொன்வேல், பி.எஸ்.முருகேசன், எம்.ஜே.மரியமாணிக்கம், எம்.சந்தனகுமார், தையூர் பா.ரமேஷ் உள்ளிட்ட சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். நன்றி, வணக்கம் உழைப்பவரே உயர்ந்தவர், என்றும்அன்புடன், ஆர்.சரத்குமார் B.Sc. நிறுவனத் தலைவர்